என் பெயர் ராமசேஷன்

என் பெயர் ராமசேஷன்
ஆதவன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 200.
டிசம்பர் 2003, இரண்டாம் பதிப்பு.
விலை: ரூ.100
ISBN: 81-88641-18-9
நேற்றைக்குதான் முதன்முறை படித்தேன். எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது. புத்தகத்தை பற்றி நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. என் வாசிப்பின் தொடர்பாக சில கருத்துகள்:
- ஆதவன் அவர்களின் படைப்புக்களை பற்றி அங்குமிங்கும் கேள்விப்பட்டாலும், மதி, இரா.மு & குழுவினர் நடத்திய புத்தகவாசகம்தான் என்னை இந்நூல் படிக்கத் தூண்டியது. மீனாக்ஸ், இரா.மு, மதிக்கு நன்றி.
- இந்த புதினத்தை படித்தவுடன் ஏனோ அய்ன் ராண்டின் ஃபவுண்டெய்ன் ஹேட் [Ayn Rand's Fountain Head] ஞாபகத்திற்கு வருகிறது.
- படிக்கும் பொழுது என்னை ஆச்சரியப் படுத்திய ஒரு விஷயம் - 1980'ல் எழுதியது என்றாலும் இன்றும் இந்த புதினத்தில் வரும் சில விவரங்கள், நையாண்டிகள் பொருந்துகின்றன. உ-ம்: ..."என்ன சொல்வதென்று தெரியவில்லை." "சொல்வதற்கு என்ன இருக்கிறது." "என்னவென்று சொல்வது நான்" என்று இப்படி ஏதேதோ (செய்திப் பத்திரிக்கை நிருபர்கள், ரேடியோ, டெலிவிஷன் நிருபர்கள் ஆகியோர் முன்னிலையில் 'மத்திய கிழக்கு' நிலைமை பற்றிக் கேட்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிபோல) பீடிகை வாக்கியங்கள் உதிர்த்தவாறிருந்தாரே தவிர ....
- நல்ல ஹாஸ்யம், கதைமாந்தர்களின் சுயவிசாரங்கள், வித்தியாசமான நடை + விவரனை ஆகியவை என்னை கவர்ந்த அம்சங்கள்.
[புத்தகத்தை எனக்காக இந்தியாவிலிருந்து தருவித்த நன்பன் மும்மூர்த்திக்கு கடமைப்பட்டுள்ளேன்.]





3 கருத்துக்கள்:
Amazing coincidence yagna!
I started reading this book today around 1 pm and finished now (4pm). Started browsing just after completing and the first post i am seeing is this!
I will also write a "vimarsanam" on this a la american president questioned on mathiya kizakk;-)
12 January, 2006 07:04 மணிக்கு à®à¯à®°à¯à®·à¯ (penathal Suresh);
இது நல்ல புத்தகமாக இருக்கலாம்.
புத்தக வியாபாரி 'மனுஷ்ய புத்திரனின்' உயிர்மை இப்பொழுது பணம் தேடி 'கண்ட' குப்பையைக் கிளறுகிறது
12 January, 2006 08:26 மணிக்கு Anonymous;
ஆச்சரியம் சுரேஷ். உங்கள் விமர்சனம் படிக்க ஆவலாக உள்ளேன்.
12 January, 2006 10:31 மணிக்கு Yagna;
Post a Comment
<< முகப்பு