உதவி தேவை: தமிழில் ஃபயர்ஃபாக்ஸ்
வணக்கம். தமிழ் கணிமைக்கு உங்கள் உதவி தேவை. இந்த ஃபயர்ஃபாக்ஸ உலாவியை தமிழில் கொண்டுவர சில ஆங்கில சரங்களை [english menu strings] தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட சரங்களை சரி பார்க்கவேண்டும். சரி, இதுக்கு நீங்க என்ன செய்யனும்?
உங்களால முடியுமான்னு எல்லாம் யோசிக்காதீங்க. நீங்க ஒரு சரம் மொழிபெயர்த்தால் கூட அது பேருதவியே. ஊர் கூடிதாங்க தேர் இழுக்கணும். ஒரு நாளைக்கு ஒருத்தர் ஒரு பத்து நிமிடம் செலவிட்டு பத்து சரங்கள் செப்பனிட்டாலே போதும், முடிச்சுடலாம்.
இந்த உதவிக்கு முன்கூட்டியே தமிழா குழுவின் சார்பா நன்றி தெரிவிச்சுக்கறேன்.
நன்றி!
அப்படியே இந்த முயற்சிக்கு வித்திட்ட விக்னேசுவரன், காதர், முகுந்த்க்கு ஒரு சின்ன ஜே!
- இங்க போய் ஒரு பயனர் கணக்கு ஒன்னு பதிவு செய்யுங்க. [Register/Login சுட்டி மேலே வலது பக்கம் இருக்கிறது]
- மொழிபெயர்க்க ஏதேனும் நிரைவடையாத கோப்பை தட்டுங்க.
- ஒவ்வொரு சரமா எடிட் செய்யுங்க. [இந்த பக்கதுல தமிழ்ல எழுத தனியா வேற எந்த மென்பொருளும் தேவையில்லை, இதனால நீங்க எங்கிருந்து வேணும்னாலும் வேலை செய்யலாம்]
- மொழிபெயர்க்கப்பட்ட் சரங்களை சரி பார்க்க முடியும்னா இங்க கமெண்டு போடுங்க, அதை ரெடி பண்ணிடலாம்.
உங்களால முடியுமான்னு எல்லாம் யோசிக்காதீங்க. நீங்க ஒரு சரம் மொழிபெயர்த்தால் கூட அது பேருதவியே. ஊர் கூடிதாங்க தேர் இழுக்கணும். ஒரு நாளைக்கு ஒருத்தர் ஒரு பத்து நிமிடம் செலவிட்டு பத்து சரங்கள் செப்பனிட்டாலே போதும், முடிச்சுடலாம்.
இந்த உதவிக்கு முன்கூட்டியே தமிழா குழுவின் சார்பா நன்றி தெரிவிச்சுக்கறேன்.
நன்றி!
அப்படியே இந்த முயற்சிக்கு வித்திட்ட விக்னேசுவரன், காதர், முகுந்த்க்கு ஒரு சின்ன ஜே!





8 கருத்துக்கள்:
Can you verify: http://developer.thamizha.com/firefox/list.php?file_list=yes&file_name=permissions.dtd.po&page=1
01 February, 2006 09:53 மணிக்கு Boston Bala;
நன்றி பாலா,
நீங்கள் மொழிபெயர்த்த permissions.dtd.po கோப்பை சரிபார்த்து அப்டேட் செய்துவிட்டேன். உங்களை சரிபார்ப்பவர்(validators) பட்டியலில் இணைத்துவிட உங்கள் லாகின் பெயரை அனுப்பவும்.
01 February, 2006 15:28 மணிக்கு Mugunth;
என் பங்களிப்பாகச் சிற்சில தொடர்களை மொழிபெயர்த்துள்ளேன். சரிபார்த்துச் சொல்லவும்.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்
02 February, 2006 23:15 மணிக்கு à®à®¾à®©à®µà¯à®à¯à®à®¿à®¯à®¾à®©à¯;
localization முயற்சி குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஆனால் தமிழ் எழுத்துக்கள் இன்னும் ஏன் firefox இல் வித்தியாசமாய்த் தெரிகிறது ?
04 February, 2006 04:34 மணிக்கு hartgtam;
என் தீநரி உலவியில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே?
04 February, 2006 10:20 மணிக்கு à®à®¾à®©à®µà¯à®à¯à®à®¿à®¯à®¾à®©à¯;
About this post in today's dinamalar...
http://www.dinamalar.com/2006feb10/flash.asp
09 February, 2006 16:03 மணிக்கு மாயவரதà¯à®¤à®¾à®©à¯...;
நன்றி ஞானவெட்டியான் ஐயா, தங்கள் உதவியை தொடரவும்.
hartgam, இதுக்கு காரணம் நீங்கள் பயன்படுத்தும் OS. மேலும் தகவல் அளித்தால் உதவ முடியும்.
மாயவரத்தான், தகவலுக்கு நன்றி. தினமலருக்கும் நன்றி.
10 February, 2006 13:01 மணிக்கு Yagna;
hi
This is maravantu
Once you had written that u lost ur mobile and got it back with the help of chennai police.
Can I have the contact numbers of the police?
if you have , pls send it to this id.
maravantu@gmail.com
Thanks
Ganesh
27 February, 2006 08:49 மணிக்கு Anonymous;
Post a Comment
<< முகப்பு